Tuesday, April 25, 2017

கவுன்சிலிங் விண்ணப்பம்; சி.இ.ஓ., அலுவலகத்தில் ஏற்பாடு

ஆசிரியர் கவுன்சிலிங் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள, ஈரோடு சி.இ.ஓ., அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு, மே, 19 முதல், 30 வரை கவுன்சிலிங் நடக்கிறது. 

மாவட்டத்துக்குள்ளும், பிற மாவட்டங்களிலும் பணியிட மாறுதல் கோரும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்போர், பணியாற்றும் தலைமை ஆசிரியரிடம் ஒப்புகை சான்று பெற்று வந்து, ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில், ஆன்லைனில் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 

நேற்று முதலே, விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம். ஆனால், ஆசிரியர்கள் யாரும் கவுன்சிலிங் விண்ணப்பத்துடன் வரவில்லை. இன்று முதல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே, 5 வரை விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment