காஞ்சிபுரம் மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பணியாற்றும், 2,674 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த வியாழக்கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வரும் புதன்கிழமை (மார்ச் 8) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கவுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளை சேர்ந்த, 27 ஆயிரத்து, 167 மாணவர்கள், மாணவியர், 26 ஆயிரத்து, 315 பேர் என, 53 ஆயிரத்து, 482 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.
இவர்களுக்காக, 145 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில், 2,674 ஆசிரியர்கள், தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அவர்களுக்கான பணி நியமன ஆணை, சம்பந்தப்பட்ட மைய கண்காணிப்பாளர்களிடம், நேற்று முன்தினம் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு, இன்று வழங்கப்படவுள்ளதாக, மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment