‘மதுரையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு பணியில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,‘ என ’நோடல்’ அதிகாரி இணை இயக்குனர் பொன்குமார் தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு 92 மையங்களில் முதன்மை, கூடுதல் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் உட்பட பணிகள் ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனை கூட்டம் முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தலைமையில் நடந்தது.
இதில் பொன்குமார் பேசுகையில், ‘தலைமையாசிரியர், ஆசிரியர்கள் புகார் மற்றும் முறைகேடு இல்லாத வகையில் தேர்வுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். புகார் எழும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,‘ என்றார்.
டி.இ.ஓ.,க்கள் லோகநாதன், ரேணுகா, முருகானந்தம், தொடக்க கல்வி அலுவலர் ராஜாமணி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் முருகேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
எதிர்ப்பு: தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு குலுக்கல் முறையில் பணி ஒதுக்க கூடாது, விடைத்தாள் திருத்தும் பணிக்கு அருகில் உள்ள மையங்களில் பணி ஒதுக்க வேண்டும் உட்பட கோரிக்கையை வலியுறுத்தி முதுகலை ஆசிரியர்கள் கூட்டத்தில் பங்கேற்க மறுத்தனர்.
கல்வி அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின், குலுக்கல் முறைக்கு பதில் பள்ளி அல்லது இருப்பிடத்தில் இருந்து 20 கி.மீ.,க்குள் தேர்வுப்பணி ஒதுக்குவது உள்ளிட்ட கோரிக்கையை அதிகாரிகள் ஏற்றனர். இதன்பின் முதுகலை ஆசிரியர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment