Thursday, January 5, 2017

பள்ளி ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, உளவியல் ஆலோசனை வழங்க, சிறப்பு பயிற்சி, சித்தாபுதுார், மாநகராட்சிப்பள்ளியில் நேற்று நடந்தது. 

இதில், 131 ஆசிரியர்கள் பங்கேற்றனர். பொதுத்தேர்வுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளதால், தேர்வு பயத்தை போக்கி, புத்துணர்ச்சியுடன் படிக்க, மாணவர்களை வழிநடத்தும் விதமாக, ஆசிரியர்களுக்கான உளவியல் ஆலோசனை வகுப்பு நடந்தது.

இதில், அரசு கலைக்கல்லுாரி உளவியல் துறை பேராசிரியர் செல்வராஜ், குழந்தைகள் நலக்குழு தலைவர் சாம்சன், உளவியல் ஆலோசகர் சச்சிதானந்தம், களப்பணியாளர் சதாசிவம் உள்ளிட்ட, பலர் பங்கேற்றனர்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரண்யா பேசுகையில், ”பயம், பதட்டம் ஆகிய இரு எதிர்மறையான எண்ணங்களை, மாணவர்கள் மத்தியில் இருந்து விரட்டினாலே, தேர்வு எளிதாகிவிடும். ”படிப்போடு, விளையாட்டு, யோகா, சைக்கிள் ஓட்டுதல் ஆகிய, பயிற்சிகளை தினசரி மேற்கொள்ள, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

”தேர்வு நடைமுறைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பது போல, தோல்வி அடையும் பட்சத்தில், தேர்ச்சியடைய உள்ள வாய்ப்புகளையும் சொல்வதால், தற்கொலை எண்ணங்கள் குறையும்,” என்றார்.

No comments:

Post a Comment