ராமநாதபுரம், தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஐந்து நாள் &'உயர் சிந்தனைதிறன் வளர்&' பயிற்சி முகாம் ராமநாதபுரம் புனித அந்திரேயா மகளிர்மேல்நிலைப்பள்ளியில் நவ.,21ல் துவங்கியது. டிச.,20 வரை பயிற்சிநடக்கிறது.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு பயிற்சி முக்கியத்துவம் குறித்து பேசினார். உதவிமாவட்ட திட்ட இயக்குனர் ரவி, பள்ளி தலைமை ஆசிரியர் மேரி உள்பட பலர் பேசினர்.
முதன்மை கருத்தாளர்களாக கணேசபாண்டியன், ஆல்பர்ட் மனோகரன், குமார், ஜெயக்குமார், காளிராஜ்,செந்தில்குமார், ஜஸ்டின், கிருஷ்ணன், சமூக அறிவியல் பாடத்திற்கான கருத்தாளர்களாக சேவியர்ராஜன், காசிவிஸ்வநாதன், சேவியர், சுப்புத்தாய், யாஸ்மின், மெபின், மலைராஜன் ஆகியோர் பயிற்சியளித்துவருகின்றனர். ஏற்பாடுகளை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்கண்ணா செய்திருந்தார்.
No comments:
Post a Comment