Friday, June 3, 2016

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி; மாணவர் சேர்க்கை விவரம் சேகரிப்பு

கடந்த, 2012-13ம் ஆண்டில் இருந்து, அரசு பள்ளிகளில் துவங்கப்பட்டு, ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்களை, உடனடியாக அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது
.
பெற்றோர் இடையேசமீப காலமாக ஆங்கிலவழிக்கல்வி மீதான மோகம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால்சரியும் மாணவர் சேர்க்கையை தடுத்து நிறுத்தஅனைத்து பள்ளிகளிலும்ஆங்கில வழிக்கல்வியை துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
அதில்கடந்த, 2012-13ம் கல்வியாண்டில் இருந்துபடிப்படியாக பெரும்பாலான உயர்நிலைமேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பிரிவு துவக்கப்பட்டுள்ளது. ஆனால்அவர்களுக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல்ஏற்கனவே உள்ள ஆசிரியர்கள் மூலமாகவே நடத்தப்படுவதால்,பெற்றோர்களுக்குபெரிய அளவில் ஈர்ப்பினை ஏற்படுத்தவில்லை. 
இதனால்தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆங்கிலவழிக்கல்வி பிரிவுக்கு உள்ள வரவேற்பினை கண்டுபிடிக்கும் வகையில்கடந்த, 2012-13ம் ஆண்டில் இருந்துஆங்கிலவழிக்கல்வி பிரிவு துவக்கப்பட்ட பள்ளிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கையைஆண்டு வாரியாக தொகுத்துதனித்தனியே அறிக்கையாக அனுப்பி வைக்கதலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment