Saturday, December 19, 2015

மனநல ஆலோசனை கூற10 நடமாடும் மருத்துவ குழு


பள்ளி மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கும் பணியில், 10 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில், நோய் பாதிப்புகளைத் தடுக்க, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மாவட்டங்களில், நீண்ட விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறந்துள்ளன.
வெள்ள பாதிப்பால், மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதால், பள்ளிகளுக்கே சென்று, மனநல ஆலோசனை வழங்கும் பணியை, அரசு துவக்கி உள்ளது. மனநல டாக்டர்கள் கொண்ட, 10 நடமாடும் மருத்துவக் குழுக்கள், இந்த பணியில் ஈடுபட்டுள்ளன. வெள்ள பாதிப்பால் ஏற்பட்ட மன குழப்பம் தீரவும், அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், ஆலோசனைகள் தரப்படுகின்றன. ஒரு வாரத்திற்கு, இது தொடரும் என, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இது தவிர, நிவாரண முகாம்களில் தங்கி உள்ளோருக்கும், மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

No comments:

Post a Comment